திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:08 IST)

மிதுனம்: ஆவணி மாத ராசி பலன்கள்

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) - பலன்: அதிக பாராட்டுகளை பெறப்போகும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.  அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.
தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக  ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.
 
குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள்.
 
பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம்  கவனம் தேவை.
 
கலைத்துறையினர் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள்  வந்து சேரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
 
அரசியல்துறையினருக்கு உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். லாபம் அதிகரிக்கும்.  பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.
 
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.
 
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை  அறிந்துகொள்வீர்கள்.  
 
திருவாதிரை:
 
இந்த மாதம் சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய  சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள்.
 
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
 
இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள்.  போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற   சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால்  சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள்.
 
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
சந்திராஷ்டம தினங்கள்:  செப்டம்பர் 10, 11.
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 3, 4.